நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கலந்துக் கொள்ள மாட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று அறிவித்தார்.

செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் அமைச்சர்களின் கேள்வி நேரத்திற்காக நாடாளுமன்றத்திற்குச் செல்வது வழக்கம் என்றாலும், டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் கலந்துகொள்ளவில்லை என்பது அவரது வழக்கம்.

ஏனெனில், பிரதமர் இந்த வாரம் ஆட்சியாளர்கள் மாநாட்டின் முன் மன்றக் கூட்டத்திலும், ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளார்.

அலுவல் பணிகள், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது தனிப்பட்ட விஷயங்கள் போன்ற சில காரணங்களால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், தமக்கோ அல்லது மக்களவை செயலாளருக்கோ தகவல் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜொஹாரி நினைவூட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset