நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் 15 இடங்களில் போட்டியிடவுள்ளதாக பெர்சாமா கட்சி அறிவிப்பு

ஜொகூர்பாரு:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், 15 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக பெர்சாமா கட்சி உறுதி செய்துள்ளது.

கட்சியின் தலைவர்களான டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில்,

கன்சில் டிரக் அறிமுக விழாவையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள், தரவுகளின்படி, வாக்காளர்களின் பின்னணி, விருப்பங்களின் அடிப்படையில் போட்டியிடப்படும் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

கூடுதலாக, இது நாடாளுமன்றப் பிரிவின் படியான உறுப்பினர் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பெர்சாமா உறுப்பினர்களின் விருப்பங்கள், அத்துடன் ஜொகூரில் உள்ள பெர்சாமா முன்னோடிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் போட்டியிட முன்வந்த பொது வேட்பாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பொருத்தம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset