நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

109 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம் கிடைத்துள்ளது: டத்தோ சுரேஷ்குமார்

தம்பூன்:

பேரா மாநிலத்தில் தம்பூன் நாடாளுமன்றதில் கடந்த 109 ஆண்டுகாலமாக தனியார் நிறுவனத்தின் கீழ் இருந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக் கூட நிலம் பள்ளியின் வாரியக் குழுவின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிலப்பட்டா இன்று அதிகாரப் பூர்வமாக பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிலத்தை பள்ளி வாரியத்தின் பெயரில் மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிக் கிடைத்துள்ளதாக தம்பூன் நாடாளுமன்ற தெகுதி உறுப்பினரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாடாளுமன்ற உறுப்பினருமான இந்த தொகுதியான இங்கு ஐந்து பள்ளிகள் உள்ளன.

அவைகள் சங்காட் கிடிங், சிம்மோர் தோட்டம், கிளேபாங் தோட்டம், சத்தியசீலா ஆகிய பள்ளிகள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து வந்துள்ளது.

அதில் சத்திய சீலா தோட்டம், கிளேபாங், சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவை பள்ளி வாரியம் கீழ் பதிவாகி நிலபட்டா பெற்றுள்ளது.

அடுத்து சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் தனி நிலபட்டா கிடைப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்ற தகவலை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சங்காட் கிண்டிங. தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்கள் விளையாடுவதற்கு நில ஒத்துக்கீட்டை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான பள்ளிகள் தோட்டங்களிலும் தனியார் நிலங்களிலும் உள்ளது.

இந்தப் பள்ளிகள் தமிழ்ப்பள்ளி நில உரிமையை நிரந்தரமாக்கப்பட வேண்டும் வலியுறுத்தினார்.

தோட்ட நிறுவனங்கள் அல்லது தனியார் சொத்து உரிமையாளர்களின் பெயரில் உள்ள நிலங்களில் இயங்கி வருகின்றன பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், உணவகம், கழிப்பறை அல்லது பிற வசதிகளை அமைக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் பள்ளி நிலத்தின் பட்டா வாரியத்தின் பெயருக்கு மாற்றப்பட்டால், பள்ளி நிர்வாகம் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமானப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

மேலும், பேராவில் இன்னும் தனியார் அல்லது தோட்ட நிறுவனங்களின் பெயரில் உள்ள தமிழ்ப்பள்ளி நிலங்களை வாரியத்தின் பெயரில். மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு நில உரிமைகள் நிரந்தரமாக மாற்றப்பட்டால், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதோடு, பள்ளி நிலமும் உரிமையும் நிரந்தர பாதுகாப்பைப் பெறும் என்று அவர் கூறினார்.


சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி எல்பிஎஸ் நிர்வாகத்தின் நிலப்பட்டா பதிவாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். மகாராணி மகிழ்ச்சி தெரிவித்தார்

இது பள்ளியின் வரலாற்றுச் சாதனையாகும் புகழாரம் சூட்டினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset