செய்திகள் மலேசியா
ஆசியான் வழியாக ரோஹிங்யா பிரச்சினைக்கு தீர்வு காண மலேசியா–வங்காளதேசம் தீவிர முயற்சி
புத்ராஜெயா:
ரோஹிங்யா அகதிகள் நெருக்கடிக்கு நிலையான தீர்வை கண்டறிய, ஆசியான் (ASEAN) மேடையின் கீழ் மலேசியாவும் வங்காளதேசமும் தங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
மலேசியா, வங்காளதேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகளின் நிலைமைக்கு தீர்வு காண, இரு நாடுகளும் அனைத்து கிடைக்கக்கூடிய தூதரக வாயில்களையும் பயன்படுத்தும் என்றும், அதில் மியான்மர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“கூட்டு முயற்சிகள் மூலம் வங்காளதேசத்திலும் மலேசியாவிலும் உள்ள ரோஹிங்யா அகதிகளின் நிலையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். வெளியுறவு அமைச்சு, ஆசியான் வழிமுறைகள் மூலம் மியான்மர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு சில பகுதிகளில் தீர்வு காண முயல்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இன்று புத்ரா பெர்டானா கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் இணைந்து அவர் இதை தெரிவித்தார்.
இதற்கிடையில், தாரிக் ரஹ்மான், வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா சமூகத்தின் நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். அவர்களைப் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் மியான்மருக்கு மீள அனுப்புவதற்கான முயற்சிகளில் மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் இரு தலைவர்களிடையேயான விரிவான கலந்துரையாடலின் முக்கிய அங்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, இரு நாடுகளும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள், குறிப்பாக காசா, பாலஸ்தீன நிலைமை குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்தன.
காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி குறித்து மலேசியாவும் வங்காளதேசமும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
“காசாவில் நடைபெறும் துயரங்கள், கொடுமைகள் குறித்து நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம். வளைகுடா, ஈரான் பகுதிகளில் நிலையான அமைதிக்காகவும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து ஈடுபடுவோம்,” என்றார் அவர்.
முன்னதாக, மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த தாரிக் ரஹ்மானுக்கு புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பான அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு அவர் வந்தடைந்தபோது, பிரதமர் அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவரை வரவேற்றனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 1:39 pm
டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்
June 22, 2026, 1:38 pm
ஹம்ஸா மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்பதை சபாநாயகர் உறுதி செய்தார்
June 22, 2026, 11:09 am
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:26 am
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 22, 2026, 8:24 am
