நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்

ஜொகூர்பாரு:

பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் மட்டுமே  நீடிக்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வரவிருக்கும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சத்து தேசியக் கூட்டணி சின்னத்தைப் பயன்படுத்தும்.

நாங்கள் இன்னும் தேசியக் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

என்ன நடந்தாலும் நாங்கள் தேசியக் கூட்டணியில் நீடிப்போம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஜொகூர் மாநிலத் தேர்தல் கேந்திரத்தை தொடங்கி வைக்கும் விழாவில் ஆற்றிய உரையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

பெர்சத்து கட்சி தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு, தேசியக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் பயன்படுத்தும் சின்னங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset