செய்திகள் மலேசியா
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
புத்ராஜெயா:
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், இன்று புத்ரா பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மரியாதைமிகு அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றார்.
காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வங்காளதேச சக பிரதமரை நேரில் வரவேற்றார். பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, நிகழ்வு மரியாதையுடன் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹம்மத்த் ஜாஹித் ஹமிடி, அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மேஜர் நூர் அஹம்மத்த் ஜைம் ஜஹாரி தலைமையிலான ராயல் மலாய் படைப்பிரிவின் 103 வீரர்கள், மூன்று அதிகாரிகள் அடங்கிய கௌரவ காவல் படையைத் தாரிக் ரஹ்மான் ஆய்வு செய்து மரியாதை செலுத்தினார்.
இரு நாடுகளும் இச்சந்திப்பின் மூலம் மலேசியா–வங்காளதேச இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளன. குறிப்பாக வர்த்தகம், முதலீடு, மனிதவள மேலாண்மை, செமிகண்டக்ட்டர் தொழில், எரிசக்தி, விவசாயம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன.
மேலும், இரு தரப்பும் பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, கலாச்சார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு, வசதிப்படுத்தல் தொடர்பான இரண்டு இராஜதந்திர குறிப்புகள் (EoN) பரிமாற்றம் நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டில், மலேசியா–வங்காளதேச இடையிலான மொத்த வர்த்தகம் 12.18 பில்லியன் ரிங்கிட் (அமெரிக்க டாலர் 2.84 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது. இதில் மலேசியாவின் ஏற்றுமதி 10.08 பில்லியன் ரிங்கிட்டாக பதிவாகியுள்ளது; முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள் முன்னிலையில் உள்ளன.
வங்காளதேசத்திலிருந்து இறக்குமதி 2.1 பில்லியன் ரிங்கிட்டாக பதிவாகி, பெரும்பாலும் ஆடைகள், காலணிகள் துறைகள் மூலம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
மொத்த வர்த்தக அளவில் வங்காளதேசம், மலேசியாவின் 28வது பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. அதேசமயம், தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக முக்கியமான வர்த்தக, ஏற்றுமதி, இறக்குமதி கூட்டாளியாகவும் நிலைபெற்றுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 1:39 pm
டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்
June 22, 2026, 1:38 pm
ஹம்ஸா மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்பதை சபாநாயகர் உறுதி செய்தார்
June 22, 2026, 1:09 pm
ஆசியான் வழியாக ரோஹிங்யா பிரச்சினைக்கு தீர்வு காண மலேசியா–வங்காளதேசம் தீவிர முயற்சி
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:26 am
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 22, 2026, 8:24 am
