செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
ஜொகூர்பாரு:
வரவிருக்கும் 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் ஆதாயங்களுக்காக அரச நிறுவனத்தை அரசியல் சதுரங்கத்தில் பகடையாக்க முயற்சிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தரந்தாழ்ந்த அரசியல் போக்கு, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் மாண்பையும் அரசியல் நேர்மையையும் சிதைப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இன்று இங்குள்ள செத்தியா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'கர்ணிவல் லிண்டுங்கி கெர்ஜாயா மடானி' நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன்,
அரசியல் போட்டிகள் எப்போதுமே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அரசியல் களத்தில் மாற்றுக் கருத்துகளை நேரடியாக எதிர்கொள்ளத் திராணியற்ற தலைவர்களே, அரச நிறுவனங்களை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.
அரசியல் போர்களைச் சந்திக்கத் துணிச்சல் இருந்தால், அந்தத் தலைவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.
மாறாக, அரச நிறுவனங்களைப் பயன்படுத்திப் பதுங்கிக் கொள்வது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகல்ல.
உங்களுக்குப் போராடத் தெரியவில்லை என்றால், உங்கள் கட்சியின் தலைவரைக் களமிறக்குங்கள்.
தங்களின் சொந்தப் போராட்டங்களை மற்றவர் மூலம் நடத்த நினைப்பது அரசியல் நேர்மையற்ற செயலாகும் என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
அண்மைய அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜோகூர் அரசப் பிரதிநிதி துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தமக்கு மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக ரமணன் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 11:09 am
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:24 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடுகிறது
June 21, 2026, 6:59 pm
