செய்திகள் மலேசியா
முத்ரா திட்டத்தின் கீழ் 2,000 இந்திய வணிகர்களுக்கு 70 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
ஈப்போ:
இந்திய வர்த்தகர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் முத்ரா நிதியில் இது வரை 2 ஆயிரம் இந்தியர்களுக்கு 70 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 220 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சியுள்ள நிதிக்கு தொடர்ந்து பெற விண்ணப்பம் செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.
ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்திய வணிகர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு வர்த்தக கருத்தரங்கை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பேசிய அவர இத்திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 220 மில்லியன் ரிங்கிட்டை அரசு ஒதுக்கியுள்ளது.
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் இந்திய வர்த்தகர்கள் எளிதாக நிதி உதவிகளைப் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் AIMS, TEKUN, Amanah Ikhtiar Malaysia (AIM), SME Bank உள்ளிட்ட ஆறு முக்கிய நிதி வசதி திட்டங்கள் இந்திய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புகளைப் பற்றி தொழில்முனைவோர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சியில் மலேசிய இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே நீகிரி செம்பிலான், மலாக்கா, கெடா , பேரா மற்றும் பிற மாநிலங்களில் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் ஜொகூர் பாரு மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் அமைச்சர் ஸ்டீவன் சின் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்த விளக்கங்களை வழங்கவுள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய வர்த்தகர்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் அதிகளவில் நிதி உதவிகளைப் பெற்று தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த உதவுவதாகும்.
இன்னும் மீதமுள்ள நிதியை பெற தகுதியுள்ள இந்திய வர்த்தகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிதி ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படும் வரை திட்டங்கள் தொடரும் என்றும், அதிகமானோர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கத்திடம் கோருவதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தனர்.
ஈப்போவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை பேரா மாநில இந்திய வர்த்தக சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் மாநிலத் தலைவர் கேசவன் முனுசாமி தலைமை தாங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 1:09 pm
ஆசியான் வழியாக ரோஹிங்யா பிரச்சினைக்கு தீர்வு காண மலேசியா–வங்காளதேசம் தீவிர முயற்சி
June 22, 2026, 11:09 am
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:26 am
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 22, 2026, 8:24 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடுகிறது
June 21, 2026, 6:59 pm
