நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடுகிறது

ஜொகூர்பாரு:

மலேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான மூடா வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில்  போட்டியிடுகிறது.


நேற்று இரவு இங்கு நடைபெற்ற, ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்கான மூடா நிதி திரட்டும் இரவு விருந்தில், ஜொகூர் மாநிலத் தேர்தலுக்காகக் கட்சியிலிருந்து மேலும் மூன்று வேட்பாளர்களை அமிரா அறிவித்தார்.


இதில் 53 வயதான பிரேம் ஆனந்த் புக்கிட் பத்து தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் அமீர் ஜாக், 30 (மகாராணி),  ஐனி ஹசிகா ஷாஃபி, 36 (சிம்பாங் ஜெராம்) தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

முன்னர் மூடா தலைவர் அமிரா ஐஸ்யா வகித்து வந்த புத்தேரி வாங்சா மாநிலத் தொகுதிக்கான வேட்பாளராக, 27 வயதான ரஷிபா அல்ஜுனித்தை அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஷிபா, அமிராவின் சிறப்பு அதிகாரியாகவும், பிரேம் ஆனந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுகின்றனர்.

அமீர், முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் சிறப்பு அதிகாரியாகவும், ஐனி ஹசிகா மூடாவின் பொதுச் செயலாளராகவும் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset