செய்திகள் மலேசியா
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெட்ரோனாஸ்-பெட்ரோஸ் இறுதி ஒப்பந்தத்தை நெருங்கி வருகின்றன: பிரதமர்
கூச்சிங்:
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெட்ரோனாஸ்-பெட்ரோஸ் இறுதி ஒப்பந்தத்தை நெருங்கி வருகின்றன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்), பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட் (பெட்ரோஸ்) ஆகிய நிறுவனங்கள், பரஸ்பர நலன்களுக்காகவும் நாட்டிற்கு நீண்டகாலப் பலன்களை அளிக்கும் வகையிலும், இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் சூழ்நிலையின் அடிப்படையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.
இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கிய பேச்சுவார்த்தைகளில், தற்போது இரு எரிசக்தி நிறுவனங்களுக்கும் இடையே மிகவும் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நானும் சரவா பிரிமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹரி அபாங் ஓபெங்கும், இரு நிறுவனங்களும் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் கூறினார்.
இது பரஸ்பர நலன்களுக்கும், நாட்டிற்கான நீண்டகாலப் பலன்களுக்கும் ஏற்ற வகையில், இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் சூழலில் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஒரே இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் உத்திசார் பங்காளிகளான இரு தரப்பினரும், எரிசக்தித் துறையில் உள்ள மகத்தான வாய்ப்புகளை நியாயமாகவும், சமமாகவும், விவேகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, பெட்ரோனாஸ், பெட்ரோஸ் இடையேயான பேச்சுவார்த்தைகளில் தற்போதைய முன்னேற்றம் மிகவும் சாதகமாக உள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 11:09 am
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:26 am
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 22, 2026, 8:24 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடுகிறது
June 21, 2026, 6:59 pm
