செய்திகள் மலேசியா
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
ஜொகூர்பாரு:
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது என்று ஜொகூர் மாநிலத்தின் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் கூறினார்.
ஜொகூரின் வளர்ச்சியையும் அதன் மக்களின் நலனையும் மேலும் திறம்படச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மாநிலத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை மிகவும் நியாயமான முறையில் திருப்பித் தர வேண்டும்.
மத்திய அரசுக்கு ஜொகூர் மாநிலம் ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகப் பங்களிக்கிறது.
இருப்பினும், கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சுமார் 2 பில்லியன் முதல் 3 பில்லியன் ரிங்கிட் மட்டுமே மாநிலத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.
ஜொகூர் ஒரு வளமான மாநிலம். ஆனால் கசிவு சிக்கலை எதிர்கொள்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதாக முன்னர் செய்திகளில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, துங்கு இஸ்மாயில் இன்று ஜொகூர் மக்களுடனான ஒரு அமர்வில் இவ்வாறு கூறினார்.
என் நண்பரான பிரதமர், ஜொகூர் ஒரு வளமான மாநிலம் என்றாலும், அதில் பல கசிவுகள்.இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆம், மாநிலத்தில் பல கசிவுகள் உள்ளன. உண்மையில் மத்திய அரசு ஜொகூரை கசியவிடுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 11:51 pm
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்
June 20, 2026, 6:39 pm
