செய்திகள் மலேசியா
அரசாங்கம் தீவிரமான வளர்ச்சியைத் தடுக்கவில்லை: பிரதமர்
கப்பாளா பத்தாஸ்:
அரசாங்கம் தீவிரமான வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் அது சமநிலையுடன் இணைந்திருக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சமூக, பொருளாதார இடைவெளி விரிவடைவதைத் தடுப்பதற்காக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அதன் பலன்களைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது.
எனவே, அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு இடத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
கசானா நேஷனல் பெர்ஹாட், பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட், ஈபிஎப் போன்ற முகமைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
வருமான இடைவெளி மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டின் பலன்களை அடித்தட்டு மக்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் இது அவசியம்.
இல்லையெனில், நாட்டில் இடைவெளி மேலும் விரிவடைவதையும், அடித்தட்டு மக்களுக்கான இடம் குறுகுவதையும் நாம் காண்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 12:17 am
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
June 20, 2026, 11:51 pm
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
