செய்திகள் மலேசியா
தன்னை வருத்திக் கொண்டு, பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கப் போராடும் ஒவ்வொரு தந்தையும் ஒரு மாவீரர்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
தந்தை என்பவன் ஒரு குடும்பத்தின் முதுகெலும்பு. தன் குடும்பத்தின் நலனுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு, பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கப் போராடும் ஒவ்வொரு தந்தையும் ஒரு மாவீரர்.
தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்த புகழாரத்தை சூட்டினார்.
அனைந்து தந்தையர்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின நல்வாழ்த்துகள். நானும் ஒரு தந்தைதான். பிள்ளைகளின் நலடுக்காகவே வாழ்பினோன். என்னைப் போலவே பல தந்தைகள் தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இன்றைய காலகட்டத்தில், ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து, பணம் அல்ல; அவர்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், நேர்மை, சமுதாயத்தின் மீதான அக்கறைதான்.
சவால்கள் நிறைந்த இந்த உலகில், பிள்ளைகளைத் தைரியத்துடன் வளர்த்து ஆளாக்கும் ஒவ்வொரு தந்தையையும் நான் இந்த நாளில் மனதாரப் பாராட்டுகிறேன்.
உங்களின் தியாகங்கள் என்றும் போற்றுதலுக்குரியவை.
குடும்பத்தை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தையும் செதுக்கும் சிற்பிகளாகத் தந்தையர்கள் திகழ வேண்டும்.
இந்தத் தந்தையர் தினத்தில், அனைத்துத் தந்தையர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் உங்கள் குடும்பத்தின் வெற்றிக்குத் தொடர்ந்து உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 12:17 am
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
June 20, 2026, 11:51 pm
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்
June 20, 2026, 6:39 pm
