செய்திகள் மலேசியா
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மலேசியாவின் அனைத்துத் தந்தையர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தங்களின் குடும்பங்கள் சிறப்பான வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும் அனைத்துத் தந்தையர்களின் தியாகத்தையும் அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு மகிழ்ச்சியான குடும்பத்திற்குப் பின்னாலும், நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணிக்கும் ஒரு தந்தை இருக்கிறார்.
அலுவலகங்கள், தொழிற்சாலைகள்,
கட்டுமானத் தளங்கள், தோட்டங்கள், கடற்பகுதிகள் என நாட்டின் அனைத்துத் துறைகளிலும், ஏன், எல்லை கடந்து பணியாற்றும் தந்தையர்கள் வரை, ஒவ்வொருவரின் உழைப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே கிளம்பி, பிள்ளைகள் உறங்கிய பின் வீடு திரும்பும் தந்தையர்களின் தியாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று குறிப்பிட்ட அவர், அந்தத் தியாகமே நாட்டின் செழுமைக்கு வலுசேர்க்கிறது என்றார்.
இன்றைய காலகட்டத்தில் குடும்பத் தலைவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு நிலப்பரப்பின் மாற்றங்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சவால்களை மலேசியா மடானி.அரசாங்கம் ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளது.
இதன் காரணமாக, மனிதவள அமைச்சு (கெசுமா) தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு கொள்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், மலேசியா மேற்கொண்ட தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள், சமூகப் பாதுகாப்பு விரிவாக்கங்கள் சர்வதேச சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து நின்று உழைக்கும் அந்தத் தந்தைமார்களின் தியாகத்திற்கு, சமூகப் பாதுகாப்பு இல்லாத அபாயத்தை நாம் பரிசாகத் தரக்கூடாது. அதனால்தான், அவர்களைக் காக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை விரைவில் அமைச்சரவையிலும், தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 12:17 am
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்
June 20, 2026, 6:39 pm
