நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆலயங்கள் இலக்கவியல் முறைக்கு மாற வேண்டும்: டத்தோ சிவக்குமார்

போர்ட்டிக்சன்:

ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆலயங்கள் இலக்கவியல் முறைக்கு மாற வேண்டும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

நாட்டில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகாவின் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளன.

இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் முறையான ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

இதன் அடிப்படையில் தான் மஹிமா ஆலய மேலாண்மை இலக்கவியல் திட்டத்தை அறிமுகம் செய்தது.

நாட்டில் உள்ள அனைத்து  ஆலயங்களும் இலக்கவியல்  முறையில் இயக்குவதற்காக Temple Management System அறிமுகம் ஆனது.

அர்ச்சனைகள் தொடங்கி ஆலயங்களுக்கான நிதி உதவிகள் வரை அனைத்துமே இலக்கியவியல் மூலம் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் ஆலயத்தின் கணக்கு வழக்குகள் முறையாக இருக்கும்.
குறிப்பாக ஆண்டு இறுதியில் ஆலயத்தின் கணக்கறிக்கையை சங்கங்களின் பதிவிலாகாவிற்கு சமர்ப்பிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று  அவர் கூறினார்.

இது வரை நாட்டில் உள்ள 90 ஆலயங்கள் இந்த இலக்கவியல் முறைக்கு மாறியுள்ளன.

அவ்வகையில் போர்ட்டிக்சனில் புகழ் பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் தற்போது இலக்கவியல் முறையை ஆலயத்தில் அறிமுகம் செய்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இலக்கியவியல் முறையில் செயல்படும் முதல் ஆலயமாக இது விளங்குகிறது.

இவ்வேளையில் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மேலே கூறப்பட்டது போல பல பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆலய நிர்வாகங்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset