நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்

கோலாலம்பூர்:

கல்வியில் சாதிக்கும் இந்தியர் மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்.

டேசா பாண்டான் மஇகா கிளைத் தலைவர் எம். செல்வேந்திரன் கூறினார்.

கெடா, குருனைச் சேர்ந்த மாணவி ஷர்மிலா, பினாங்கு, புக்கிட் பெண்டேராவைச் சேர்ந்த மாணவி பிரீத்திகா ஆகியோர்  எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றனர்.

அவர்களின் வெற்றியைக் கண்டு மஇகா பெருமிதம் கொள்கிறது.

இந்நிலையில் மஇகா டேசா பாண்டன் கிளை சார்பாக கல்விக்கான பாராட்டு, ஊக்கத்தின் அடையாளமாக  அம்மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆதரவில் மடிக்கணினிகளை நாங்கள் வழங்கினோம்.

இவ்விரு மாணவிகளும் தங்களது உயர்கல்விப் பயணத்தில் எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்.

மேலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாதையிலும் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என நம்புகிறோம்.

இந்த அர்த்தமுள்ள சந்திப்பை ஏற்பாடு செய்த கெடா மெர்போக் தொகுதி, பினாங்கு, புக்கிட் பெண்டேரா தொகுதி ஆகியவற்றின் மஇகா தலைவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் என்று செல்வேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்









தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset