நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூருக்கு வந்து அரசாங்கம் வேலையைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, அர்த்தமற்ற பேச்சுகளைப் பேச வேண்டாம்: துங்கு இஸ்மாயில்

ஜொகூர்பாரு:

ஜொகூருக்கு வந்து அரசாங்கம்  வேலையைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, அர்த்தமற்ற பேச்சுகளைப் பேச வேண்டாம்.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் இதனை கூறினார்.

மாநில அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது என்று கூறி, எந்தவொரு தரப்பும் தவறான பிம்பத்தை உருவாக்கக் கூடாது.
ஒவ்வொரு கொள்கை, திட்டம் மற்றும் வழிகாட்டுதலும் வெறும் அறிவிப்பாக இல்லாமல், உண்மையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜொகூர் நிர்வாகம் எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

மக்கள் சரியாக நடத்தப்படவில்லை என்றோ அல்லது ஆளும் அரசாங்கம் தன் கடமையைச் செய்யவில்லை என்றோ இங்கு வந்து அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசாதீர்கள்.

நான் என் அரசாங்கத்தைக் கண்காணிக்கிறேன். இந்த அரசாங்கம் அதன் கடமையைச் செய்வதை நான் உறுதி செய்கிறேன்.

ஜொகூர் மக்களுடனான இன்று நடைபெற்ற ஒரு அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset