செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் சென்று பணிபுரியும் மலேசியர்களுக்காக ‘ஸ்கிம் பெங்கெம்பாரா’ திட்டம்; நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
ஜொகூர் பாரு:
சிங்கப்பூருக்கு தினமும் பயணம் செய்து பணிபுரியும் சுமார் 400,000 மலேசியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்கிம் பெங்கெம்பாரா’ திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாராக உள்ளது.
அது எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஆவணங்கள் மற்றும் ஒப்புதல் பெறுதல் போன்ற அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.
ஜொகூர் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த இந்தத் திட்டம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் வழிகாட்டலில், எனது மற்றும் எனது துணை அமைச்சரின் மேற்பார்வையில் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இன்று ஜொகூர் பாருவில் நடைபெற்ற 'Pocket Talk HRD Corp' சுற்றுப்பயண நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெர்கெசோவின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், சிங்கப்பூருக்கு தினமும் பயணம் செய்து பணிபுரியும் மலேசியர்களுக்குப் பெரும் பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 12:17 am
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
June 20, 2026, 11:51 pm
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்
June 20, 2026, 6:39 pm
