நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

வரும் தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜொகூர் மாநில தேர்தலை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.

நெகிரி செம்பிலான் தேர்தலை எதிர்கொள்ள பெர்சத்து தயாராகி வருகிறது.
கட்சியின் தேர்தல் கேந்திரமும் தற்போது துரிதமாக செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில் பெர்சத்து சயாப் பிரிவு நெகிரி செம்பிலானில் பல தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

அந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வதற்கு பெர்சத்து சயாப் பிரிவில் கடுமையாக உழைத்து வருகிறது.

இந்த தொகுதிகளில் நீலாய் சட்டமன்றத் தொகுதியும் அடங்கும்.

இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இங்குள்ள வாக்காளர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறேன்.

இதன் அடிப்படையில் நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset