செய்திகள் உலகம்
தாய்லாந்து – வியட்நாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலும் வியட்நாமின் மத்தியப் பகுதியிலும் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் பிராந்திய மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
தாய்லாந்து வானிலை ஆய்வுத் துறையின் நிலநடுக்கக் கண்காணிப்பு பிரிவு வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் அதிகாலை 3.43 மணியளவில் சியாங் ராய் மாகாணத்தின் மே சுவாய் மாவட்டத்தில் பதிவானது.
ரிக்டர் அளவுகோலில் 1.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, காலை 5.49 மணியளவில் வியட்நாமின் மத்தியப் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் உபோன் ராட்சத்தானி மாகாணத்திலுள்ள முவாங் மாவட்டத்திலிருந்து சுமார் 317 கிலோமீட்டர் தென்கிழக்கே வியட்நாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த இரு நிலநடுக்கங்களாலும் இதுவரை உயிர்சேதமோ, பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. நிலைமையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
