செய்திகள் உலகம்
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
ஹோசிமின் சிட்டி:
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
பூனைகளைத் திருடும் கும்பலை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாகத் தென் வியட்நாமில் பூனைகளைப் பொறி வைத்துப் பிடித்ததைக் கும்பல் ஒப்புக்கொண்டது.
டே நின் (Tay Ninh) மாநிலத்திலும் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரிலும் உயிருடன் இருந்த 400 பூனைகளையும் மாண்ட 80 பூனைகளின் உடல்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மற்றோர் இடத்தில் மேலும் 21 பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியட்நாமில் நாய்களையும் பூனைகளையும் சாப்பிடுவது சட்டபூர்வமானது.
ஆனால் கடைக்காரர்கள் விலங்குகள் எங்கிருந்து வந்தவை என்று ஆதாரம் காண்பிக்க வேண்டும்.
ஹோ சி மின் நகரில் செல்லப் பிராணிகள் திருடப்படும் சம்பவங்களை விசாரித்தபோது கும்பல் பிடிபட்டது.
திருடப்பட்ட சுமார் 40 பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 11:48 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
June 17, 2026, 9:45 am
ஆசியான்–ரஷ்யா உச்சிமாநாடு: பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மலேசியா
June 16, 2026, 5:26 pm
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்: டிரம்ப்
June 16, 2026, 3:15 pm
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
June 16, 2026, 10:48 am
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது: 8 பேர் மரணம்
June 15, 2026, 2:25 pm
