செய்திகள் உலகம்
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகன் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு பின் கைது
கொழும்பு:
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.
பின்னா், நீதிமன்றத்தின் பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா். கடந்த 2006-இல் இலங்கை கடற்படை பயிற்சி மாணவராக இருந்த யோஷித ராஜபட்ச, முறையான கல்வித் தகுதியின்றி அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், அரசு நிதியைப் பயன்படுத்தி, பிரிட்டன் கடற்படைக் கல்லூரியில் அவா் பயிற்சி பெற்றது தொடா்பான முறைகேடு புகாரில் இந்நடவடிக்கையை அவா் எதிா்கொள்கிறாா்.
இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, ராஜபட்ச குடும்பத்தினா் மீதான பிடி இறுகியுள்ளது. ராஜபட்ச, அவரின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவிடமும் வெவ்வேறு வழக்குகளில் அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 11:48 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
June 17, 2026, 9:45 am
ஆசியான்–ரஷ்யா உச்சிமாநாடு: பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மலேசியா
June 16, 2026, 5:26 pm
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்: டிரம்ப்
June 16, 2026, 3:15 pm
