செய்திகள் உலகம்
வளைகுடா பதற்றம் தணிந்தது: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத், சமாதானத் தூதர் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்
வாஷிங்டன்:
அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுபூர்வமான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்டத்தை அமல்படுத்த இருதரப்பும் உறுதி அளித்து உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர் நிறுத்தத்தை அமல் செய்தன. ஆனால் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்பும் அவ்வப்போது தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.
பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இருதரப்பு இடையே சமரச முயற்சிகளில் ஈடுபட்டன. இதன்காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 19-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஒருநாள் முன்னதாகவே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள வெர்சாய் அரண்மனையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேற்று விருந்து அளிக்கப்பட்டது. அப்போது அவர் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதேபோல ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்தபடி அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளேன். உலக அமைதி, பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் ஈரான் உறுதியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
சமரச தூதர் என்ற வகையில் அமெரிக்கா, ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்னணு முறையில் கையெழுத்திட்டார்.
அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி ஆகியோருக்கு நன்றி.
சமரச முயற்சிகளில் ஈடுபட்ட கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து நாடுகளின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு: ‘அமெரிக்கா - ஈரான் இடையே 111 நாட்கள் நீடித்த பதற்றம் தற்போது முழுமையாக தணிந்திருக்கிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
