செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்: திங்கட்கிழமை வரை கட்டம் கட்டமாக 17 ஜசெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்: அந்தோனி லோக்
குளுவாங்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 17 ஜசெக வேட்பாளர்கள் திங்கள் வரை கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மெங்கிபோல் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட கட்சியின் முதல் வேட்பாளர் சூ போ யீ என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
நாளை சனிக்கிழமையன்று, ஜொகூர் ஜெயா, தீராம், செனாய், புக்கிட் பெர்மை மாநிலத் தொகுதிகளுக்கான மேலும் நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
மீதமுள்ளவர்கள் வரும் திங்கட்கிழமை, பிரதமர் கலந்துகொள்ளும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவார்கள்.
இங்குள்ள ஜாலான் இஸ்மாயிலில் நடைபெற்ற மெங்கிபோல் மாநில வேட்பாளர் அறிவிப்பு விழாவிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.
புத்தேரி வங்சா தொகுதியில் ஜசெக வேட்பாளரை நிறுத்தாது.
மற்ற நம்பிக்கை கூட்டணிக் கட்சிகளுக்குப் போட்டியிட வழிவிடும் என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
