செய்திகள் மலேசியா
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தப் புரிந்துணர்வு; மோதலை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும்: பிரதமர்
கசான்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து மத்திய கிழக்கில் அமைதியை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்,
இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டும்.
முக்கியமான இந்தப் பேச்சுவார்த்தைகளின் கால அட்டவணையை வழிநடத்துவதில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வழங்கிய நேரடித் தகவலின் அடிப்படையில் தனது நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
60 நாட்கள் என்பது நீண்ட காலம் அல்ல, எனவே நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
பாகிஸ்தான் பிரதமர் எனக்குத் தெரிவித்ததன் அடிப்படையில், அவர் இந்த விஷயத்தை வெளிப்படையாகவும் ஆழமாகவும் விவாதித்துள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் கூட ஈடுபட்டுள்ளார். எல்லாம் மிகவும் சாதகமாகத் தெரிகிறது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
