நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அபாரம்

வான்கூர்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கனடா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

பிபி பேலஸ் அரங்கில் நடைபெற்ற பி பிரிவுக்கான ஆட்டத்தில் கனடா அணியினர் கட்டார் அணியை சந்தித்து விளையாடினர்.

முற்பாதி ஆட்டத்தில் கனடா அணிக்கு கிளய் ராயன் 1 கோலையும் ஜோனதன் டேவிட் இரு கோல்களையும் அடித்தனர்.

இதன் மூலம் முற்பாதி ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

பிற்பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

இதில் ஜோனதன் டேவிட், நாதன் சலிபா, எதிரணி வீரர் ஒருவர் ஆகியோர் கனடா அணிக்கு அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

இறுதியில் கனடா அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் கட்டார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இவ்வாட்டத்தில் கட்டார் அணிக்கு இரண்டு சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset