நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

போர்த்துகல் அணிக்கு எதிராக களமிறங்கிய சேமுவல் முத்துசாமி

டெக்ஸ்சஸ்:

போர்த்துகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய வம்சாவளி வீரர் சேமுவல் முத்துசாமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் அணியினர் டிஆர் காங்கோ அணியை சந்தித்து விளையாடினர்.

இவ்வாட்டத்தில் இரு அணிகளும் சமநிலை கண்டன.

இதில் போர்த்துகல் அணிக்கு கடும் சவாலாக விளங்கிய டிஆர் காங்கோ அணியில் சேமுவல் முத்துசாமி விளையாடினார்.

முன்னதாக தமிழகத்தை பூா்விகமாகக் கொண்ட தந்தைக்கும், காங்கோவை பூா்விகமாக உடைய தாய்க்குமாக, பிரான்ஸில் பிறந்தவா் சேமுவேல் முத்துசாமி (29).

டிஆர் காங்கோ கால்பந்து அணியில் 2019இல் இடம் பிடித்த அவா், இதுவரை அந்த அணிக்காக 57 ஆட்டங்களில் விளையாடியுள்ளாா்.

அந்த அணியுடன், கிரீஸ் கிளப்பான அட்ரோமிடோஸ், பிரான்ஸின் நான்தெஸ், துருக்கியின் ஆஸ்பெல்சன் சிவாஸ்போா் ஆகிய அணிகளுக்காகவும் அவா் விளையாடியுள்ளாா்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset