நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து: குரோஷியாவை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

டெக்ஸ்சஸ்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

இன்று அதிகாலை நடைபெற்ற எல் பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் களம் கண்டன.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹாரி கேய்ன் தனது அணிக்கு கோலை அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது.

எனினும் இங்கிலாந்து அணி இந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை.

ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் இங்கலாந்து வீரர் டெல்கன் ரைஸ் வழங்கிய பந்தை சிரியாக பயன்படுத்திக் கொண்ட ஹாரி கேய்ன் தனது அணிக்கு கோல் அடித்தார்.

சற்றும் தொய்வின்றி ஆடிய குரோஷியா அணி ஆட்டத்தின் 45ஆஆவது நிமிடத்தில் தனது 2ஆவது கோலை அடிக்க இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் புள்ளிகள் சமநிலைக்கு வந்தன.

இதைத் தொடர்ந்து தொடங்கிய ஆட்டத்தின் பிற்பாதியின் 47ஆவது நிமிடத்தில் ஜூட் பெலிங்காம் இங்கிலாந்து அணியின் மூன்றாவது  கோல் அடித்தார்.

தொடர்ந்து இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் மார்கஸ் ராஸ்போர்ட் இங்கிலாந்து அணிக்கு மற்றொரு கோலை அடிக்க 4-2 என்ற கணக்கில் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset