நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நார்வே அபார வெற்றி

போஸ்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நார்வே அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

போஸ்டனில் இன்று நடைபெற்ற ஐ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈராக், நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 29ஆவது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அணிக்கு 1-0 என்ற முன்னிலையை பெற்றுத் தந்தார்.

நார்வேவின் முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

39ஆவது நிமிடத்தில் ஈராக் அணியின் அய்மன் ஹுசைன் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

முதல் பாதி முடிவடைவதற்கு முன்பாக 43ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நார்வே அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

பிற்பாதியில் நார்வே ஆட்டக்காரர்களான லியோ ஒஸ்டிகார்ட், எதிரணி ஆட்டக்காரர் அய்மான் ஹுசைன் ஆகியோர் இரு கோல்களை அடித்தனர்.

இறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்திய நார்வே அணி, தனது முதல் லீக் ஆட்டத்திலேயே அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் ஐ பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது.

எர்லிங் ஹாலண்ட் இரு கோல்கள் அடித்து நார்வே வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset