செய்திகள் விளையாட்டு
ஒரே போட்டியில் 7 வரலாற்றுச் சாதனைகள்: உலகக் கிண்ண அரங்கில் மெஸ்ஸியின் மாபெரும் முத்திரை
கான்சாஸ் சிட்டி:
உலகக் கால்பந்தின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதோடு, ஒரே போட்டியில் ஏழு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து கால்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.
இந்தப் போட்டி மெஸ்ஸிக்கு மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது. அர்ஜென்டினா தேசிய அணிக்காக அவர் தனது 200ஆவது சர்வதேசப் போட்டியில் களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார்.
மேலும், இந்த ஹாட்ரிக் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 16 கோல்களுடன் இணைந்து முதலிடத்தைப் பகிர்ந்துகொள்ளும் நிலையை அடைந்தார். இதன் மூலம் ஜெர்மனியின் கால்பந்து ஜாம்பவானான மிரோல்லோவ் க்லோவின் சாதனையையும் சமன் செய்தார்.
2006, 2010, 2014, 2018, 2022, 2026 என ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி தன்வசப்படுத்தினார்.
அத்துடன், 38 வயது 357 நாட்களில் ஹாட்ரிக் கோல் அடித்து, உலகக் கிண்ண வரலாற்றில் ஹாட்ரிக் பதிவு செய்த வயதான வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
உலகக் கிண்ண அரங்கில் 16 கோல்கள், 8 கோல் உதவிகள் என மொத்தம் 24 கோல் பங்களிப்புகளைப் பதிவு செய்துள்ள மெஸ்ஸி, அதிக கோல் பங்களிப்புகளைச் செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி, உலகக் கிண்ண வரலாற்றில் பெனால்டி எல்லைக்கு வெளியே இருந்து அதிக கோல்கள் (6) அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் தக்கவைத்துள்ளார்.
கால்பந்து ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் மெஸ்ஸி, உலகக் கிண்ண வரலாற்றில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்த இளைய வீரர், மிக வயதான வீரர் என்ற இரு அரிய சாதனைகளையும் ஒருசேர தன் பெயரில் பதித்து, தனது புகழை மேலும் உயர்த்தியுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 11:01 am
லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் தொடங்கியது அர்ஜெண்டினா
June 17, 2026, 9:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நார்வே அபார வெற்றி
June 17, 2026, 9:58 am
எம்பாப்பே 2 கோல்கள்: செனகலை வீழ்த்தியது பிரான்ஸ்
June 16, 2026, 9:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சவூதி அரேபியாவிடம் தப்பியது உருகுவே
June 16, 2026, 7:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
