நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சமநிலை

ஜியோர்ஜியா:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

ஏ பிரிவில் பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

அட்லான்டா அரங்கில் நடந்த போட்டியின் 6ஆவது நிமிடத்திலேயே செக் குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது.

செக் குடியரசு அணியின் அலெக்சான்டர் சோஜ்கா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக் குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது.

பிற்பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

இதற்கு பலனாக 83ஆவது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது.

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன.
ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின.

இதனால், இந்தப் போட்டி சமநிலை ஆனதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்து அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset