நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் தொடங்கியது அர்ஜெண்டினா

கன்சாஸ்:

லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்கள் அடிக்க  உலகக் கிண்ண போட்டியை அர்ஜெண்டினா  வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கன்சாஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற ஜே பிரிவு ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் அல்ஜீரியா அணியை சந்தித்து விளையாடினர்.

முற்பாதி ஆட்டத்தில் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஒரு கோலை அடித்து அர்ஜெண்டினா அணியை முன்னிலைப்படுத்தினார்.

விறுவிறுப்பாக தொடங்கிய பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

ஆட்டத்தில் 60,76ஆவது நிமிடங்களில் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு மேலும் இரு கோல்களை அடித்தார்.

தொடர்ந்து போராடிய அல்ஜீரியா அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.

குறிப்பாக ஹாட்ரிக் கோல்களை அடித்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது பலத்தை நிரூபித்துள்ளார்.

மேலும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset