செய்திகள் விளையாட்டு
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: போர்த்துகல் ரசிகர்கள் ஏமாற்றம்
டெக்ஸ்சஸ்:
போர்த்துகல்,டிஆர் காங்கோ அணிகளுக்கு இடையிலான பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி சமநிலையில் முடிந்தது.
ஹூஸ்டனில் நடந்த பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல், டிஆர் காங்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் போர்த்துகலின் ஜோவ் நெவ்ஸ் கோல் அடித்தார்.
அதன் பிறகு, 45ஆவது நிமிடத்தில் டிஆர் காங்கோ அணி வீரர் யோனெ விஸ்ஸா கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை உயரத் தாவி தலையால் முட்டி கோல் அடித்தார்.
இது உலகக் கிண்ணப் போட்டியில் அந்த அணியின் முதல் கோல் ஆகும்.
பிற்பாதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
இது ரொனால்டோவின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில், முந்தையப் போட்டியில் அவரது போட்டியாளராக கருதப்படும் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 8:11 am
போர்த்துகல் அணிக்கு எதிராக களமிறங்கிய சேமுவல் முத்துசாமி
June 18, 2026, 8:10 am
உலகக் கிண்ண கால்பந்து: குரோஷியாவை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி
June 17, 2026, 4:56 pm
ஒரே போட்டியில் 7 வரலாற்றுச் சாதனைகள்: உலகக் கிண்ண அரங்கில் மெஸ்ஸியின் மாபெரும் முத்திரை
June 17, 2026, 11:01 am
லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் தொடங்கியது அர்ஜெண்டினா
June 17, 2026, 9:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நார்வே அபார வெற்றி
June 17, 2026, 9:58 am
