நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது கோலைப் போட்டு அசத்திய கொலம்பியா

நியூயார்க்:

கொலம்பியாவும் உஸ்பெக்கிஸ்தானும் (Uzbekistan) மோதிய ஆட்டத்தில் 3-1 எனும் கோல் வித்தியாசத்தில் கொலம்பியா வெற்றியைத் தட்டிச்சென்றது.

மலேசிய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு மெக்சிகோவின் புகழ்பெற்ற எஸ்டேடியோ அஸ்டெகா (Estadio Azteca) அரங்கில் ஆட்டம் நடைபெற்றது.

இது உஸ்பெக்கிஸ்தானின் முதல் உலகக் கிண்ணப் போட்டி.

சென்ற முறை உலகக் கிண்ணப் போட்டிக்குத் கொலம்பியா தகுதிபெறத் தவறியது.

சற்றுத் தடுமாறிய கொலம்பிய அணி 41ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.

60ஆவது நிமிடத்தில் உஸ்பெக்கிஸ்தானும் தனது முதல் கோலைப் போட்டது.

5 நிமிடங்களுக்குப் பிறகு கொலம்பியா இரண்டாவது கோலைப் போட்டது.

ஆட்டம் முடியும்போது 9 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அப்போது கடைசி சில விநாடிகளில் கொலம்பியா மூன்றாவது கோலை அடித்து அசத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset