நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எல்லாக் காலத்திலும் சிறந்தவர் யார் என்ற விவாதம் முடிந்துவிட்டது; மெஸ்ஸி GOAT என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்: ரொனால்டோ

லிஸ்பன்:

அல்ஜீரியாவுக்கு எதிராக அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரு பரபரப்பான ஹாட்ரிக் கோல் அடித்ததைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, எந்தவித விவாதத்திற்கும் இடமின்றி அவரை எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (GOAT) என்று அறிவித்துள்ளார்.

இந்த நம்பமுடியாத ஆட்டத்தின் மூலம், இந்தர்மியாமி நட்சத்திர வீரரான மெஸ்ஸி, நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை அவர்களின் தொடக்க உலகக் கிண்ண போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கு வழிநடத்தினார்.

இது என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது.

போட்டிக்குப் பிறகு போர்த்துகல் ஊடகமான ஏ போலாவிடம் பேசிய ரொனால்டோ,

மெஸ்ஸியின் தீர்க்கமான ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியதோடு, எல்லா காலத்திலும் சிறந்த வீரர் யார் என்பது குறித்த விவாதம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கான்சஸ் சிட்டியில் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவை எளிதான வெற்றிக்கு மெஸ்ஸி வழிநடத்தி, நடப்பு சாம்பியன்கள் தங்களது பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியை சரியான முறையில் தொடங்க வழிவகுத்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset