நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா தீவிரமாகச் செயல்பட வேண்டும்: பிரதமர்

கசான்:

உள்நாட்டுச் சந்தைச் சங்கிலி பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, ரஷ்யா, மத்திய ஆசியாவின் சாத்தியமான நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா இன்னும் தீவிரமாகவும் துணிச்சலாகவும் செயல்பட வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வெளிப்புறப் புவிசார் அரசியல் அழுத்தக் காரணிகளால் சர்வதேச ராஜதந்திரத்தில் அதீத எச்சரிக்கையுடன் செயல்படும் பழைய நடைமுறை, மக்களின் பொருளாதார நலன்களுக்காகக் கைவிடப்பட வேண்டும்.

சில புவிசார் அரசியல் காரணங்களால் முன்பு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், நாம் இன்னும் முன்னோக்கியும், தீவிரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டிய சில மூலோபாயத் துறைகளை நான் காண்கிறேன்.

நாம் வேகம் குறைத்தால், பின்தங்கிவிடுவோம்.

இது மிகவும் கவலையளிக்கும் ஒரு சூழல் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற ஆசியான்-ரஷ்யா நினைவு உச்சிமாநாட்டிற்கான தனது இரண்டு நாள் பணிப் பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு, மலேசிய ஊடகங்களுடனான நிறைவு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset