நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாயா நடவடிக்கை; எம்ஏசிசி கண்காணிப்பில் 1,600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்: அப்துல் ஹலிம்

புத்ராஜெயா:

டாயா திட்டம் தொடர்பான நடவடிக்கையில் எம்ஏசிசி கண்காணிப்பில் 1,600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.


எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இதனை கூறினார்.


சுமார் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள டாயா கெர்ஜயா 2.0 ஊக்கத்தொகை கோரிக்கைகளைப் போலியாகத் தயாரித்த வழக்கில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து, மொத்தம் 1,638 நிறுவனங்கள் எம்ஏசிசி கண்காணிப்பில் உள்ளன.

விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 143 நிறுவனங்களில் தங்கள் தரப்பு கவனம் செலுத்தியதாகவும், அதன் விளைவாக டாயா நடவடிக்கையின் மூலம் 97 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எங்கள் ஆரம்பகட்ட மதிப்பீட்டில், இதுவரை 143 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், நாங்கள் நடத்திய புலனாய்வு, விசாரணைகளில் உண்மையில் 1,638 நிறுவனங்கள் இருந்தன.

மதிப்பீட்டின்படி, மொத்தத் தொகை 45 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற டாயா நடவடிக்கை விசாரணையின் முன்னேற்றம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset