நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மிகவும் வெப்பமான ஆண்டாக இது அமையவுள்ளது; மலேசியாவில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்: அமைச்சர் ஆர்தர்

கோலாலம்பூர்:

மலேசியாவில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குரூப் இதனை கூறினார்.

ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டின் முதல் பாதி வரை நீடிக்கும் எல் நினோ நிகழ்வைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மலேசியாவில் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, அந்த காலகட்டத்தில் நாட்டில் மழைப்பொழிவு 40% வரை குறையக்கூடும்.

அத்துடன் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டை எதிர்கொள்ளும் அபாயமும் உள்ளது.

அதே வேளையில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும்.

இது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டை எதிர்கொள்ளும் சாத்தியத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் இளைஞர்  மன்றம் கூட்டம் 2026ஐத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset