செய்திகள் மலேசியா
தாரா, அமோய், கெலாட் ஆகிய யானைகளை ஜப்பானுக்கு மாற்றுவதற்காகக் கூறப்படும் 53 மில்லியன் ரிங்கிட் பணம் தொடர்பான குற்றச்சாட்டில் தனக்குத் தொடர்பு இல்லை: நிக் நஸ்மி
கோலாலம்பூர்:
தாரா, அமோய், கெலாட் ஆகிய யானைகளை ஜப்பானுக்கு மாற்றுவதற்காகக் கூறப்படும் 53 மில்லியன் ரிங்கிட் பணம் தொடர்பான குற்றச்சாட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என நிக் நஸ்மி மறுத்துள்ளார்.
மலேசியாவிலிருந்து ஜப்பானில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு மூன்று யானைகளை மாற்றுவது தொடர்பானதாகக் கூறப்படும் ஊழலில் தனக்குத் தொடர்பு இல்லை.
முன்னாள் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் மறுத்துள்ளார்.
தன் மீதும் அவரது முன்னாள் அலுவலகம் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று அவர் விவரித்தார்.
மேலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தும் எந்தவொரு விசாரணையையும் அவர் வரவேற்றார்.
என்னைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் எனது அலுவலகமோ அல்லது நானோ எந்தவொரு ஊழலிலும் ஈடுபட்டோம் என்பதை நான் முழுமையாக மறுக்கிறேன்.
அவர்கள் புகார் அளிக்க விரும்பினால், அது சரிதான்.
இந்த விவகாரத்தை விசாரிக்க எம்ஏசிசிக்கோ அல்லது வேறு எந்தத் தரப்புக்கோ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 11:06 pm
ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா தீவிரமாகச் செயல்பட வேண்டும்: பிரதமர்
June 18, 2026, 11:02 pm
உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது: டத்தோ குமார்
June 18, 2026, 3:06 pm
