நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு, சட்டவிரோத சூதாட்டம், இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், நாடு தழுவிய சோதனைகளில் மொத்தம் 58 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 11 அன்று தொடங்கிய இந்த நடவடிக்கை, பல்வேறு முகமைகளின், குறிப்பாக எம்சிஎம்சியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, ​​நாடு தழுவிய அளவில் மொத்தம் 52 சோதனைகள் நடத்தப்பட்டது.

இதில் 54 ஆண்கள், நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 58 சந்தேக நபர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், 25,684.65 ரிங்கிட் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  பந்தயங்களின் மதிப்பு 488,582.47 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset