செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை உடனடியாக அமல்படுத்த பிரதமர் உத்தரவு
கசான்:
நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக, மலேசியாவிற்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
காலாவதியான அதிகாரத்துவ நடைமுறைகளை ஒதுக்கி வைக்க மலேசியா துணிய வேண்டும்.
சில நாடுகள் விதிக்கும் ஒருதலைப்பட்சமான கட்டுப்பாடுகள் குறித்து அதிக அக்கறை கொள்ளக்கூடாது.
ரஷ்யாவிலிருந்து ஆண்டுக்கு ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கும், இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கும் வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே மலேசியாவை விடுமுறைக்கான இடமாகத் தேர்வு செய்கிறார்கள்.
இந்த இடைவெளி குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் துருக்கிக்கு ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளும், தாய்லாந்துக்கு இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளும் (ரஷ்யா) வருகிறார்கள்.
அவை நமக்கு அருகிலுள்ள இரண்டு நாடுகள். ஆனால் மலேசியாவிற்கு ஏன் 100,000 பேர் மட்டுமே? விமானப் பயணச் சிக்கல், பணம் செலுத்தும் முறை ஆகியவை இதை மிகவும் கடினமாக்குகின்றன.
எனவே சில சமயங்களில், காலாவதியான பழைய நடைமுறைகளிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்.
மேலும், மற்ற நாடுகள் எவ்வாறு எதிர்மறையாகப் பதிலளிக்கும் அல்லது எதிர்வினையாற்றும் என்பதைப் பற்றியும் அதிகமாகக் கவலைப்படுகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 11:06 pm
ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா தீவிரமாகச் செயல்பட வேண்டும்: பிரதமர்
June 18, 2026, 11:02 pm
உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது: டத்தோ குமார்
June 18, 2026, 3:06 pm
