நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படுவது எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

புத்ராஜெயா:

கடந்த ஆண்டு நவம்பரில் மலாக்காவின் டுரியான் துங்கால் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மூவரின் குடும்பத்தினர், இந்த வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க எம்ஏசிசி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் அருண் துரைசாமி, விசாரணையின் முன்னேற்றத்தில் தனது கட்சிக்காரர் அதிருப்தி அடைந்ததால் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை இன்னும் ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் விசாரணைக்கு உதவக்கூடும் என்று தாங்கள் கூறிய பல ஆவணங்களையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சமர்ப்பித்துள்ளனர்.

அவற்றுள், சம்பவம் முழுவதையும் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு ஒலிப்பதிவு, ஒரு சுயாதீன புலனாய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒலிப்பதிவின் தடயவியல் பகுப்பாய்வு, சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள், அத்துடன் காணாமல் போனதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசி, ஸ்மார்ட்வாட்ச் தொடர்பான தகவல்களும் அடங்கும்.

இந்த விவகாரம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.

இன்று வரை பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இன்னும் உள்ளன என்று அவர் எம்ஏசிசி தலைமையகத்தின் வெளியே கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset