செய்திகள் மலேசியா
2025 எஸ்டிபிஎம் தேர்வில் சிஜிபிஏ 2.88 ஆக உயர்ந்துள்ளது; இது 2013க்குப் பிறகு மிக உயர்ந்த நிலையாகும்
கோலாலம்பூர்:
2025 எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள், முந்தைய ஆண்டின் 2.85 என்ற ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியுடன் (சிஜிபிஏ) ஒப்பிடுகையில், 0.03 புள்ளிகள் அதிகரித்து 2.88 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2023 எஸ்டிபிஎம் தேர்வில் 2.57 புள்ளிகளாக இருந்ததோடு ஒப்பிடுகையில், இது 12.06 சதவீதம் அல்லது 0.31 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இது மாணவர்களின் அடைவுநிலையைப் பொறுத்தவரை மிக உயர்ந்த, குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மொத்தம் 1,336 மாணவர்கள் அதாவது 3.5 சதவீதம் பேர், சிஜிபிஏ 4-ஐப் பெற்றுள்ளனர்.
இது 2024ஆம் ஆண்டை விட 70 மாணவர்கள் அதிகம் என்று மலேசியத் தேர்வுகள் மன்றத்தின் த்லைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் எம்டி அமின் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, எஸ்டிபிஎம் 2025 தேர்வில் சிஜிபிஏ 3.75, சிஜிபிஏ 3, சிஜிபிஏ 2.75, சிஜிபிஏ 2 பெற்ற மாணவர்களின் சதவீதம் 2024-ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 1,228 ஆக இருந்த 5ஏ, 4ஏ தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு முறையே 1,285 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 11:06 pm
ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா தீவிரமாகச் செயல்பட வேண்டும்: பிரதமர்
June 18, 2026, 11:02 pm
உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது: டத்தோ குமார்
June 18, 2026, 3:06 pm
