செய்திகள் மலேசியா
தேசிய அளவிலான 18 சிறந்த எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படும்: ஃபட்லினா
கோலாலம்பூர்:
தேசிய அளவிலான 18 சிறந்த எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் தேசிய அளவிலான தேர்வில் சிறந்து விளங்கும் 18 மாணவர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.
2025 எஸ்டிபிஎம் மாணவர் குழுவிற்காக முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், நாட்டின் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்விச் சூழலை, குறிப்பாக ஆறாம் படிவ மாணவர்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்பைத் தொடர இடங்களைப் பெற முடியும்.
சிறந்த மாணவர்களுக்கு இளங்கலைப் படிப்புக்காக இடங்களையோ அல்லது கல்வி உபகாரச் சம்பளத்தையோ வழங்க முன்வந்துள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் அர்ப்பணிப்பைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து பாராட்டுகிறேன் என்று ஃபட்லினா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 11:06 pm
ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா தீவிரமாகச் செயல்பட வேண்டும்: பிரதமர்
June 18, 2026, 11:02 pm
உலகக் கிண்ண சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது: டத்தோ குமார்
June 18, 2026, 3:06 pm
