நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயல்பாட்டு இடையூறுகளுக்கு மத்தியில் விமானங்களின் பயன்பாட்டு நேரத்தை மேம்படுத்த மலேசியா விமானக் குழுமம் (MAG), ஏர்போர்னியோவுடன் இணைந்து செயல்படும் 

கோலாலம்பூர்:

சரவாக்கைச் சேர்ந்த ஏர்போர்னியோ விமான நிறுவனம் சமீபத்திய செயல்பாட்டுச் சவாஅறைகூவல்களைச் சமாளிக்க முயன்று வரும் நிலையில், மலேசியா விமானக் குழுமம் - மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG), தனது பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுமையான சீரமைப்பு (MRO) பிரிவான MAB இன்ஜினியரிங் சர்வீசஸ் மூலம், தற்போதுள்ள பராமரிப்புக் கூட்டாண்மையின் கீழ் அதற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது.

MAB இன்ஜினியரிங் சர்வீசஸ், ஏர்போர்னியோவிற்கு லைன், பேஸ் மற்றும் உதிரிபாகங்கள் பராமரிப்பு, அத்துடன் கிடங்கு, தளவாட ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வருவதாக மலேசியா விமானக் குழுமம் கூறியது.

"சமீபத்திய செயல்பாட்டு இடையூறுகளைத் தொடர்ந்து, விமான நிறுவனத்தின் செயல்பாட்டு மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், விமானங்களின் பயன்பாட்டு நேரத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியா விமானக் குழுமம் (MAG) ஏர்போர்னியோவுடன் தொடர்ந்து நெருக்கமாக ஈடுபட்டு வருகிறது," என்று அக் குழுமம் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தது.

செயல்பாட்டு நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும், பயணிகளுக்கான இடையூறுகளைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டாகச் செயல்பட்டு வருவதால், செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன், தனது பராமரிப்பு, உதிரிபாகங்கள் விநியோக ஏற்பாடுகளையும் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருவதாகவும் அக்குழுமம் கூறியது.

ஏர்போர்னியோ தற்போது 21 இடங்களுக்குச் சேவை வழங்குகிறது, இதன் முதன்மை செயல்பாட்டுத் தளங்கள் கோத்த கினபாலுவிலும்  மிரியிலும் அமைந்துள்ளன. அதன் விமானக் குழுவில் எட்டு ATR 72-500 ரக விமானங்களும் ஆறு DHC-6-400 ட்வின் ஆட்டர் (Twin Otter) ரக விமானங்களும் உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset