நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலில் 10 முதல் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட பெர்சாமா இலக்கு: நிக் நஸ்மி

கோலாலம்பூர்:

வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் 10 முதல் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட பெர்சாமா மலேசியா கட்சி இலக்கு வைத்துள்ளது.

அக்கட்சியிம் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் இதனை தெரிவித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற ஒரு பொது கலந்துரையாடல் அமர்வில் பேசிய முன்னாள் அமைச்சர்,

16ஆவது பொதுத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலும் கூட, கட்சி எந்த அரசியல் கூட்டணியிலும் சேராது.

இருப்பினும், அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்க்கட்சியுடன் கையெழுத்திட்டது போன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே 2021-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர் குறிப்பிட்டார்.

அதில் பல முக்கிய சீர்திருத்தங்கள் அடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset