நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்குவாஷ் மையத் திட்டம் தொடர்பான 7 ஊழல் குற்றச்சாட்டுகளை பிஎஸ்எம் தலைமை நிர்வாக அதிகாரி மறுத்துள்ளார்

கோலாலம்பூர்:

ஸ்குவாஷ் மையத் திட்டம் தொடர்பான 7 ஊழல் குற்றச்சாட்டுகளை மலேசியா அரங்கம் கார்ப்பரேஷனின் (பிஎஸ்எம்) தலைமை நிர்வாக அதிகாரி இல்யாஸ் ஜமீல் மறுத்துள்ளார்.

புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய ஸ்குவாஷ் மையத்தை மேம்படுத்துவதற்கான டெண்டர் தொடர்பாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரிங்கிட் மதிப்புள்ள ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என வாதிட்டார்.

நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், 42 வயதான இல்யாஸ் குற்றமற்றவர் என வாதிட்டார்.

இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 16(ஏ)(பி)-இன் கீழ் கொண்டுவரப்பட்டன.

மேலும் அதே சட்டத்தின் பிரிவு 24(1)-இன் கீழ் தண்டனைக்குரியவை.

துணை அரசு வழக்கறிஞர் நூராலிஸ் மாட் நீதிமன்றத்தில், இக்குற்றத்திற்குப் பிணை வழங்க இயலாது.

இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை, குற்றத்தின் தீவிரம், அவர் தப்பி ஓடும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் விருப்பப்படி ஜாமீன் வழங்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

வழக்குத் தரப்பு, ஒரு ஜாமீன்தாரருடன் 200,000 ரிங்கிட் ஜாமீன் தொகையையும், அத்துடன் வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் மாதத்திற்கு ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளையும் முன்மொழிந்தது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு ஜாமீனுடன் 100,000 ரிங்கிட் ஜாமீ தொகைக்கு அனுமதி அளித்ததுடன், வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடப்பிதழை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset