நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுற்றுலா பயணத்தின் போது சம்பந்தப்பட்ட நாட்டையும் உள்ளூர் மக்களையும் அவமதிப்பது கண்டிக்கத்தக்கது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சுற்றுலா பயணத்தின் போது சம்பந்தப்பட்ட நாட்டையும் உள்ளூர் மக்களையும் அவமதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

சீனாவில் இருக்கும்போது உள்ளூர் மக்களை அவமதிப்பதுடன் கேலி செய்வததாக குற்றம் சாட்டப்படும் சில மலேசிய சுற்றுலாப் பயணிகளின் செயல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்
மேலும் அது எனக்கு ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இத்தகைய செயல்கள் பொருத்தமற்றவை மட்டுமல்ல, நீண்ட காலமாக மலேசியர்களின் அடையாளமாக இருந்து வரும் உன்னதமான விழுமியங்களுக்கும் எதிரானவை.

பயணம் என்பது, பிற நாடுகளில் உள்ள மக்களின் வரலாறு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை பற்றி நாம் அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் அனுபவமாக இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் கவனம் ஈர்ப்பதற்காக, அவமதிக்கும் ஒப்பீடுகளைச் செய்வதற்கோ, உள்ளூர் மக்களின் கண்ணியத்தைக் குறைக்கும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ அல்லது அவர்களின் வாழ்க்கை முறையைக் கேலி செய்வதற்கோ அது ஒரு களம் அல்ல.

நாம் மற்றொரு நாட்டில் இருக்கும்போது, ​​விருந்தினர்களாகவே இருக்கிறோம்.

விருந்தினர்கள் என்ற முறையில், உள்ளூர் சமூகத்தின் சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை மதிப்பது நமது தார்மீகப் பொறுப்பாகும்.

ஒரு நாட்டை மதிப்பது என்பது விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல, மரியாதையுடன் நடந்து கொள்வது நமது பேச்சைக் காப்பது, ஒரு சமூகத்தில் நிலவும் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதும் ஆகும்.

ஒருவர் ஒரு நாட்டிற்குச் செல்ல முடிவு செய்தால், அவர் அந்நாட்டில் வாழும் மக்களை மதிக்க வேண்டும்.

ஆக ஒரு சில தனிநபர்களின் பொறுப்பற்ற மனப்பான்மை மலேசியாவின் பிம்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டின் மக்கள் அனைவர் மீதும் ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அனைத்து மலேசியர்களையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்தும், உள்ளூர் சட்டங்களை மதித்தும், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset