நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி சமூக ஊடகக் கணக்குகள், நடப்புப் பிரச்சினைகள் குறித்து கிளந்தான் சுல்தானை சந்தித்து ஃபஹ்மி விளக்கம் 

கோத்த பாரு: 

கிளந்தானின் ரீஜென்ட், தெங்கு முஹம்மது ஃபக்ரி பெட்ரா, கோட்டா லாமா அரண்மனையில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலைச் சந்தித்து விளக்கமளித்தார்.

இங்குள்ள கோட்டா லாமா அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கியது.

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பணிகளின் எல்லைகள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள், அறிக்கைகள் குறித்து சுல்தானுக்கு விளக்கமளிப்பதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கிளந்தான் சுல்தானின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள், சமூக ஊடகங்களில் பெருகி வரும் போலி கணக்குகளின் பிரச்சினை, குறிப்பாக மலேசிய அரச நிறுவனம் தொடர்பான தவறான செய்திகள், எதிர்மறையான உள்ளடக்கங்கள் பரவுவது ஆகியவை முன்வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் அடங்கும்.

கிளந்தான் சுல்தான் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் ஒரு நட்புறவான சந்திப்பு, புகைப்பட அமர்வுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset