செய்திகள் மலேசியா
எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு, உள்ளூர் நாணய வர்த்தகம் குறித்து டத்தோஸ்ரீ அன்வாரும் புதினும் விவாதித்தனர்
கசான்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர், இரு நாடுகளுக்கும் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறையாக விளங்கும் எரிசக்தித் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
எரிசக்தி, எண்ணெய் விநியோகத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதற்கான ரஷ்யாவின் உறுதியை மலேசியா பாராட்டியது.
மேலும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் அன்வரும் புதினும் கலந்துரையாடினர் என்று பிரதமர் அலுவலகம் விளக்கியது.
புதிய தொழில்நுட்பங்கள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவ, நவீன விவசாயம், மருந்துத் துறைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்றும் அந்த அறிக்கை விளக்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
